தோல்வி பயத்தில் அதிமுக மிரண்டு போய் உள்ளது என கரூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தின் 4 தொகுதி களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கரூர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவ காமசுந்தரி, குளித்தலை ரா.மாணிக் கம் ஆகியோரை ஆதரித்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுக வெற்றி பெறும் என்று கூறப்படுவதால், தோல்வி பயத்தில் அதிமுக மிரண்டுபோய் உள்ளது. கோடி கோடியாக செலவழித்து மக்கள் வரிப்பணத்தில் அதிமுக அரசு விளம்பரங்கள் கொடுத்தாலும் மக்கள் ஏமாறமாட்டார்கள்.
அமைச்சரவையில் இரு விஜய பாஸ்கர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைவார்கள்.
இந்த ஆட்சியில் 2 முறை தொழில் முதலீட்டு மாநாடு நடத்தப்பட்டு ரூ.6 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறுகின்றனர். எத்தனை தொழிற்சாலைகள் வந்தன? எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள்? என வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கேட்டால் பதில் இல்லை.
விவசாயி எனக்கூறி கொள்ளும் பழனிசாமி மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை ஆதரிக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்படும். இது ஆட்சி மாற் றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல. சுயமரியாதை, தன்மானத்தை காப்பாற்றும் தேர்தல். நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் தேர்தல்.
கரூர் நகராட்சி மாநகராட்சி யாகவும், பள்ளபட்டி, புகழூர் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும். கால்நடை கல்லூரி, இயற்கை வேளாண் கல்லூரி, பெண்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago