திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர்கள் - 3,484 பேர் மின்னனு முறையில் : தபால் வாக்களிக்க விண்ணப்பம் : ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

இந்திய பாதுகாப்புப்படையில் பணியாற்றி வரும் படைவீரர்கள் மின்னனு தபால் வாக்கு முறையில் தங்களது வாக்குகளை செலுத்த திருப்பத்தூர் மாவட்டத்தில் 3,484 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் இந்திய பாதுகாப்பு படைகளில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் படை வீரர்கள் (சேவை வாக்காளர்கள்) மின்னணு முறையில் பெறப்பட்ட தபால் வாக்குச்சீட்டை பயன்படுத்தி தங்களது வாக்குகளை மின்னனு தபால் வாக்கு முறையில் (ETPBS) செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் சேவை வாக் காளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு செலுத்துவது குறித்து மின்னனு வழிமுறை மூலம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையானது 2 அடுக்கு பாதுகாப்பு கொண்டதாகும். ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) மற்றும் தனிநபர் அடையாள கடவுச்சொல் (PIN)-ஐ பயன்படுத்துவதன் மூலம் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது.மேலும், தனித்துவமான QR குறியீடு பயன் படுத்துவதால் கள்ள ஓட்டு தடுக்கப்படும்.

இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த முறையை பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேவை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் வாக்கு சீட்டு மின்னணு வழிமுறையில் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் கடந்த 24-ம் தேதி அவர்கள் பணி யாற்றி வரும் இடங்களுக்கே மின்னனு மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாணியம்பாடி தொகுதியில் 863 பேர், ஆம்பூர் தொகுதியில் 480 பேர், ஜோலார்பேட்டை தொகுதியில் 1,146 பேர், திருப்பத்தூர் தொகுதியில் 695 பேர் என மொத்தம் 3,484 பேர் மின்னனு முறையில் தபால் வாக்கு செலுத்த உள்ளனர்.

மின்னனு தபால் வாக்கு முறையை பயன்படுத்தி சேவை வாக்காளர்கள் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குச்சீட்டில் வாக்களித்து வரும் மே 2-ம் தேதி காலை 7.59 மணிக்குள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்