வேலூர் மாவட்டத்தில் - தபால் வாக்குகள் செலுத்திய 963 காவலர்கள் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள 963 காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என சுமார் 1,400 பேர் தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தொகுதி வாரியாக தபால் வாக்குகள் அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை தொடங்கிய பணி மாலை வரை நடைபெற்றது.

இதில், வேலூர் தொகுதியில் 231 பேர், காட்பாடி தொகுதியில் 199 பேர், கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 163 பேர், குடியாத்தம் (தனி) தொகுதியில் 70 பேர், அணைக்கட்டு தொகுதியில் 300 பேர் என மொத்தம் 963 பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல், முன்னாள் ராணுவ வீரர்கள் 324 பேர் வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகள் பெறும் பணி நிறைவு பெற்றதும் அந்த பெட்டியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீலிட்டு பாதுகாப்பு அறையில் வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்