ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலம் சூரம்பட்டிவலசு பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும், என ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி அளித்தார்.
ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், ஜெகநாதபுரம் காலனி, பாரதிபுரம், அண்ணா வீதி, காந்திஜி வீதி, ராஜாஜி வீதி, சாஸ்திரி சாலை, சூரம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அப்பகுதி வாக்காளர்களிடம், அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:
சூரம்பட்டி வலசு, வீரப்பன் சத்திரம், டீச்சர்ஸ் காலனி மற்றும் இதைச் சுற்றிய பகுதியில் நெசவாளர்கள் அதிகமாக உள்ளனர்.
நூல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயரவும், அதிமுக தேர்தல் அறிக்கையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கு தனியாக சங்கம் அமைத்து, அவர்களுக்குத் தேவையான கடன் வழங்கி, நெசவு தளவாடங்களை மேம்படுத்த உதவிகள் வழங்கப்படும்.
சூரம்பட்டி வலசு பகுதியில் காய்கறி சந்தை மற்றும் பேருந்துகள் நின்று செல்ல தேவையான வசதிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி குடிநீருக்கு பதிலாக, ஊராட்சிக்கோட்டையில் இருந்து கொண்டு வரப்படும் நீர் வழங்கப்படுகிறது.
இப்பகுதி யில் புதிய குடிநீர் இணைப்பு தேவைப் படுவோருக்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும், இப்பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago