ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களைத் தேர்தல் செலவினப் பார்வையாளர் சுராஜ்குமார் குப்தா நேற்று தணிக்கை செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆத்தூர் தொகுதி செலவின கூர்நோக்குத் தொகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆத்தூர் தொகுதிக்கு தனியாக செலவினப் பார்வையாளராக சுராஜ்குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேட்பாளர்கள் செலவு தொகையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக நேற்று ஆத்தூரில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள், வேட்பாளர்கள் பராமரிக்கும் செலவினப் பதிவேடு, வவுச்சர்கள், ரசீதுகள் ஆகியவற்றை தணிக்கை செய்தார்.
20 வேட்பாளர்களின் முகவர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கு களுடன் தேர்தல் செலவினப் பார்வையாளரை ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தித்தனர். வேட்பாளர்கள் வாரியாக அவர்கள் காட்டிய கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
வேட்பாளர்களின் முகவர்களிடம், செலவு கணக்குகளைப் பராமரிக்கும் முறை, ரொக்கப்பணம் செலவு செய்வது தொடர்பான வரம்புகள் குறித்து தேர்தல் பார்வையாளர்அறிவுரை வழங்கினார். கணக்குகளைத் தணிக்கைக்கு முன்னிலைப்படுத் தாத வேட்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிவுறுத் தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago