ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் திமுக வேட்பாளர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த தர்மராஜ், ஊராட்சி துணைத் தலைவர் ஜீவரெத்தினம் சங்கர், ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேற்று ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
முன்னதாக கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago