அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று பிரச்சாரம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களான அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை), பி.கே.வைரமுத்து (திருமயம்) , மு.ராஜநாயகம் (அறந்தாங்கி), எஸ்.ஜெயபாரதி (கந்தர்வக்கோட்டை) ஆகியோரை ஆதரித்து அந்தந்த தொகுதிகளுக்கு சென்று நடிகை விந்தியா நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: அதிமுக அரசு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் சாதித்து காட்டியுள்ளது.

தேர்தல் அறிக்கையில் 6 இலவச காஸ் சிலிண்டர், அரசு வேலை, பெண்களுக்கு உதவித்தொகை தருவதாக முதல்வர் கூறியுள்ளார். அனைத்தையும் உறுதியாக செய்வார். எனவே, வாக்காளர்கள் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்