திருப்பத்தூரில் பணி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியையிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நேற்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மங்கை யர்கரசி (50). இவர், பாச்சல் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து மங்கை யர்கரசி திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பாச்சல் மேம்பாலம் அருகே நடந்து சென்றார்.
அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், மங்கையர்கரசி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது, சுதாரித்துக் கொண்ட ஆசிரியை சங்கிலியை 2 கை களிலும் இருக்கமாக பிடித்தபடி கூச்சலிட்டார்.
அதற்குள், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சங்கிலியை வேகமாக பிடித்து இழுத்தபோது ஆசிரியை தவறி விழுந்து காயமடைந்தார். அப்போது 8 பவுன் தங்கச்சங்கிலி இரண்டாக அறுந்தது. உடனே, கையில் கிடைத்த சங்கிலியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தப்பிக்க முயன்றனர்.
உடனே, அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த இளைஞர்களை மடக்கிப்பிடித் தனர். பிறகு, அவர்களை திருப் பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜூ (26), நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்ராஜ் (27) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்னர். அவர்களிடம் இருந்த தங்கச்சங்கிலியை பறி முதல் செய்தனர்.
மேலும், காயமடைந்த ஆசிரியை மங்கையர்கரசி திருப் பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago