வேலூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

வேலூரில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பிஎஸ் என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணாசாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கை களுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மாரிமுத்து கூறும்போது, ‘‘பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் தற்போது 4-ஜி அலை வரிசை கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்கள் உள் நாட்டு தயாரிப்புகளாகும்.

ஆனால், தனியார் செல்போன் நிறுவனங்களில் பயன் படுத்தப்படும் கருவிகள் பன்னாட்டு நிறு வனங்களின் கருவிகள். பிஎஸ் என்எல்-ல் உள்நாட்டு கருவிகள் பயன்படுத்தினால் வளர்ச்சி பாதிப்படையும். பொருட்களின் தரம் மற்றும் தயாரித்தலில் முன் அனுபவம் போன்றவை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

எனவே, பிஎஸ்என்எல் உபகரணங்கள் அனைத்தும் பன்னாட்டு தயாரிப்புகளாக இருக்க வேண்டும். பிஎஸ்என்எல்-ல்சுமார் 1.5 லட்சம் கி.மீ தொலைவுக்கு பைபர் கேபிள் புதைக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் பிஎஸ்என்எல் முழுவதும் தனியார் மயமாக்கப்பட வாய்ப்புள்ளது. 70 ஆயிரம் உயர் கோபுரங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்ப்பதை அரசு கைவிட வேண்டும். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்