திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் தேர்தல் பொது பொதுபார்வையாளர், செலவினம் மற்றும் காவல்துறை பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் ஜெகநாதன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
நிகழ்வில் பல்வேறு கட்சியினர் பேசியதாவது: வரவு- செலவுக் கணக்கு ஒவ்வொரு கட்சிக்கு ஒரு நேரம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பொதுவாக ஓரிடத்தில் வைத்து சரிபார்க்க வேண்டும். திருப்பூர் வடக்கு தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்டோரின் 167 பேருக்கு தபால் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற விவரங்களும், காலமுறைகள், எந்த தேதி வரை வாக்களிக்கலாம் என்பது தொடர்பாக எதுவும் அறிவிக்கப்பட வில்லை. இதனை முறைப்படுத்த வேண்டும். அனைத்து பூத் ஏஜெண்டுகளுக்கும் தகவல் அளித்துவிட்டு, அந்தப் பகுதியில் தபால் வாக்குகளைப்பெற வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பூத் ஏஜெண்டுகள், மது அருந்தி இருந்தால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதனால் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர். கோரிக்கை தொடர்பாக விரைவில் உரிய பதில் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago