திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள, 10 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் நேரிலோ, தங்களது தேர்தல் முகவர் அல்லது தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலமோ தங்களின் செலவுக் கணக்கை உரிய பதிவேடுகளுடன் 3 கட்டமாக சம்பந்தப்பட்ட செலவின மேற்பார்வையாளர் குழுவிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதில், கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்கள் மார்ச் 26, 30, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், பொன்னேரி தொகுதி வேட்பாளர்கள் மார்ச் 25, 29, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் தங்களின் செலவுக் கணக்கை சமர்ப்பிக்கவேண்டும்.
அதேபோல் மார்ச் 25, 30, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில், திருவள்ளூர், திருத்தணி, மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளின் வேட்பாளர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்கள் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆவடி தொகுதி வேட்பாளர்கள் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் செலவுக்கணக்கை சமர்ப்பிக்கலாம்.
மார்ச் 26, 30, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர்கள் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திலும், அம்பத்தூர் தொகுதி வேட்பாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல அலுவலகத்திலும் செலவுக் கணக்கை சமர்பிக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
164 வேட்பாளர்கள் தங்களின் செலவுக் கணக்கை உரிய பதிவேடுகளுடன் 3 கட்டமாக ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago