கடலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐயப்பனுக்கு நேற்றிரவு வாக்கு சேகரித்து கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:
தமிழகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கொண்டு அந்த காலியிடங்கள் நிரப்பப்படும். புதியதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தொழில் முதலீடுகள் கொண்டு வரப்படும். தமிழகத்தில் வேலை வாய்ப்புகளில் 75 சதவீதம் தமிழகத்தைச் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வழங்கப்படும். பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காமல், தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும் என்று கூறுகிறார்கள். ஏற்கெனவே ஸ்கூட்டி தருவதாக கூறினார்கள், வரும், ஆனால் வராது; அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இதை தரப்போவதில்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும், மகளிருக்கு பேருந்தில் கட்டணம் இலவசம், ரேஷன் அட்டை உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உதவி தொகை தருவதாக கூறியிருக்கிறோம். கடலூர் நகராட்சி மாநகராட்சியாக்கப்படும், கடலூரில் மருத்துவக் கல்லூரி திட்டம் செயல்படுத்தபடும். ஆட்டோ வாங்க ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago