கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தேர்தல் பொது பார்வையாளர்கள் சந்திரசேகர் வாலிம்பே, பிரசன்னா வி.பட்டனசெட்டி, அனுராதா சங்கர் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தேர்தல் பார்வையாளர்கள்,“தேர்தல் தொடர் பான எந்தவொரு புகார்களையும் எந்நேரத்திலும் எங்களிடம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தெரிவிக்கலாம்.
மத்திய அரசு அறிவித்துள்ள கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் இதில் கவனம் அவசியம்.
பிரச்சார வாகனங்களுக்கு முறையாக முன் அனுமதி பெற வேண்டும். அதில், அனுமதி பெறப்பட்ட அறிவிப்பை ஒட்டியிருப்பது அவசியம்.
எந்தவொரு அரசியல் கட்சியினரும் பணம், பரிசு பொருட்கள் மற்றும் இதர சலுகைகள் எதுவும் வாக்காளர்களுக்கு வழங்க கூடாது. இதுதொடர்பான தகவல்கள் ஏதேனும் பொது மக்கள் அறிய நேர்ந்தால் உடனே தொடர்பு கொள்ளலாம். தகவல் தருவோரின் ரகசியம் காக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
பணம், பரிசு பொருட்கள் எதுவும் வாக்காளர்களுக்கு வழங்க கூடாது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago