சிவகங்கை மாவட்டத்தில் பார பட்சமின்றி தேர்தல் விதிமீறல் ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிய தோ்தல் அலுவலரும், ஆட்சி யருமான பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தேர்தல் அதிகா ரிகள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியர் பி. மதுசூதன்ரெட்டி கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தலா 3 பறக் கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 4 வீடியோ மதிப்பீட்டு குழுக்கள், ஒரு வீடியோ பார்வையிடும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை மற்றும் இணையதளத்துக்கு வந்த புகார் கள் குறித்தும் உடனுக்குடன் விசாரிக்கப்படுகின்றன. மார்ச் 23 வரை விதிமீறல் தொடர்பாக 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 45 புகார்கள், இணையதளத்தில் வந்த 45 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago