குமரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்து வமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று ஏற்பட்ட 120-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் ஒரு போலீஸ்காரர், மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். தக்கலை முளகுமூட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்து போனார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,656 ஆக உள்ளது. நேற்று 5 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 8,432 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 64 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்