தி.மலை மாவட்டத்தில் இதுவரை ரூ.1.67 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தி.மலை மாவட்டத்தில் உள்ள8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், வாக் காளர்களுக்காக வேட்பாளர்கள் தரப்பில் இருந்து பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று முன்தினம் வரை யிலான 135 தணிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 1 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 393 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அதேபோல், 9 தணிக் கையில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட அலுமினிய பாத்திரங்கள், புடவைகள், மதுபான பாட்டில்கள், செல்போன்கள், பட்டு ஜரிகை நூல்கள் உள்ளிட்ட 16 லட்சத்து 97 ஆயிரத்து 332 ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய் துள்ளனர்.
பணம் மற்றும் பரிசுப் பொருட் களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்து அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவின் முன்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மேல் முறையீடு செய்ததால் 52 லட்சத்து 55 ஆயிரத்து 95 ரூபாய்,1 லட்சத்து 56 ஆயிரத்து 128 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களையும் உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட் களுக்குரிய ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago