தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத வாக்குச்சாவடி அலு வலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றக்கூடிய 6,028 பேர்களுக்கு தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்வதற்காக கணினி முறையில் குலுக்கல் செய்து தேர்வு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர்களான மினஹஜ் அலாம், நில்காந்த் எஸ்.ஆவாத், மனோஜ் காத்ரி மற்றும் தேர்தல் காவல் பார்வையாளரான அவினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,588 வாக்குச்சாவடி அலுவலர்கள், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,472 வாக்குச்சாவடி அலுவலர்கள், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,496 வாக்குச்சாவடி அலுவலர்கள், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,472 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 4 தொகுதி களுக்கு மொத்தம் 6,028 வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
2-ம் கட்ட பயிற்சி வகுப்பு
வாக்குச்சாவடி அலுவலர் களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) அந்தந்த வட்டங்களில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இப்பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சிகளை அளிப்பார்கள். இதில், மாதிரி வாக்குப்பதிவின் செயல் விளக்கமும் வாக்குச்சாவடி அலுவ லர்களுக்கு வழங்கப்படும்.
தேர்தல் அலுவலர்களுக்கு தனித்துவமான பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி மையங்களில் கரோனா தடுப்பு குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளை தேர்தல் பொது பார்வையாளர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத வாக்குச்சாவடி அலு வலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தவறா மல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வந்தனாகர்க் (திருப்பத்தூர்), லட்சுமி (ஜோலார் பேட்டை), காயத்ரி சுப்பிரமணி (வாணியம்பாடி) கிருஷ்ணமூர்த்தி (ஆம்பூர்), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன் ராஜசேகர், (தேர்தல்) முருகானந்தன், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago