திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 59 ஆயிரம் வாக்காளர்கள் : அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் புதிதாக 3501 பேர் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 11,66,417, பெண் வாக்காளர்கள் 11,93,104, மூன்றாம் பாலினத்தவர் 283 என மொத்தம் 23,59,804 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று கூறியதாவது:

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய வாக்காளர் இறுதி பட்டியல், கடந்த ஜனவர் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜனவரி 21 முதல் மார்ச் 19-ம் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் திருத்தம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, கள விசாரணைக்கு பிறகு வாக்காளர் பதிவு அலுவலரால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில், கடந்த 19-ம் தேதி வரை கீழ்க்கண்ட எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர்.

தாராபுரம் (தனி) தொகுதியில் 349வாக்குச்சாவடிகளும், ஆண்- 1,26,057,பெண் 1,32,480, மூன்றாம் பாலினத்தவர் 10 என 2,58,547 வாக்காளர்களும், காங்கயத்தில் 372 வாக்குச்சாவடிகளும், ஆண் - 1,24,976,பெண்- 1,32,163, மூன்றாம் பாலினத்தவர் 23 என 2,57,162 வாக்காளர்களும், அவிநாசியில் (தனி) 401 வாக்குச்சாவடிகளும் 401, ஆண் - 1,36,232,பெண்- 1,44,313, மூன்றாம் பாலினத்தவர் 6 என 2,80,551 வாக்காளர்களும், திருப்பூர் (வடக்கு) - 535 வாக்குச்சாவடிகளும், ஆண் - 1,92,995, பெண் - 1,86,018, மூன்றாம் பாலினத்தவர் 100 என 3,79,113 வாக்காளர்களும் உள்ளனர்.

இதேபோல, திருப்பூர் (தெற்கு) - 401 வாக்குச்சாவடிகளும், ஆண் - 1,39,870, பெண் - 1,36,570, மூன்றாம் பாலினத்தவர் - 33 என 2,76,473 வாக்காளர்களும், பல்லடத்தில் 548 வாக்குச்சாவடிகளும், ஆண் - 1,94,219, பெண் - 1,95,473, மூன்றாம் பாலினத்தவர் 68 என 3,89,760 வாக்காளர்களும், உடுமலைப்பேட்டையில் 380 வாக்குச்சாவடிகளும், ஆண் - 1,30,278, பெண் - 1,39,428, மூன்றாம் பாலினத்தவர் 22 என 2,69,728 வாக்காளர்களும், மடத்துக்குளத்தில் 357 வாக்குச்சாவடிகளும், ஆண் - 1,21,790, பெண் - 1,26,659, மூன்றாம் பாலினத்தவர் 21 என 2,48,470 வாக்காளர்களும் உள்ளனர்.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3343 வாக்குச்சாவடிகளும், ஆண் - 11,66,417, பெண் - 11,93,104, மூன்றாம் பாலினத்தவர் - 283 என மொத்தம் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளர்கள் உள்ளனர்.

12,725 பேர் புதியவர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் புதிய வாக்காளர்கள் 3501 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் தொகுதியில் குறைந்தபட்சமாக 95 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 8 தொகுதிகளில் மொத்தம் 12,725வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்; 5706 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேற்படி வாக்காளர் பட்டியல் நகல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களால் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில்பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். அதில், தங்கள் பெயர் இடம் பெற்றிருப்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்