தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்களிடம் - பின்னலாடை துறை பெண் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம், பின்னலாடைத் தொழிலில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் சார்பில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சைல்டுலைன் அலுவலகத்தில் குடிமக்கள் செயல்பாட்டுக் குழு, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று செய்தியாளர்கள் நிகழ்வு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் ஆலோசகர் நம்பி கூறும்போது, "தேர்தலில் வரும்போது மக்களின் பிரதான பிரச்சினைகளை களைவதாக கூறி, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஜவுளித்தொழில் குறிப்பாக பின்னலாடைத் தொழில்,பெருமளவு வேலைவாய்ப்பை மக்களுக்கு வழங்குவதாக விளங்குகிறது. இத்தொழிலில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தொழிலாளர்கள் தமக்கான சட்டப்படியான உரிமைகள், சமூக பாதுகாப்பு திட்டங்களை பெறுவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

தொழிலாளர் நலன் காப்பதில் மாநில அரசின் கொள்கை திட்டங்கள், சட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை கருத்தில்கொண்டு, பின்னலாடைத் தொழிலில்பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் சார்பில் தேர்தல் கோரிக்கைகளை விவாதித்து உருவாக்கியுள்ளோம். இந்த கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வலியுறுத்த உள்ளோம்" என்றார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அருணாச்சலம், வழக்கறிஞர்கள் அமைப்பின் பிரதிநிதி சகாதேவன் மற்றும் பெண் பனியன் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்