பொது சுகாதாரத் துறை பொங்கலூர் வட்டாரம் சார்பில், தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கண்டியன்கோயில் ஊராட்சியில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், மருத்துவர்நவீன் அடங்கிய மருத்துவக் குழுவினர், ஊராட்சிக்கு உட்பட்ட செயலர், தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். கண்டியன் கோயில் ஊராட்சி தலைவர் கோபால் தடுப்பூசி போட்டுக்கொண்டு தொடங்கி வைத்தார். தடுப்பூசி போட்டவர்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. 81 பேருக்கு தடுப்பூசிபோடப்பட்டது.
இதேபோல, அவிநாசிபாளையம் தனியார் பள்ளியில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில், 119 பேருக்கு பொங்கலூர் வட்டார சுகாதாரத் துறை மூலமாக கோவிட் ஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், நவீன், சியாமளா மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் மூலமாக ஊசி போடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள் வரதராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago