ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான, கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பவானி, அந்தியூர் தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார் மிஷ்ரா மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் சி.கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 926 இடங்களில் 2215 வாக்குச்சாவடி மையங்கள், 526 கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்காக 3,454 கட்டுப்பாட்டு இயந்திரம், 4,757 வாக்குப்பதிவு இயந்திரம், 3,695 வாக்காளர்கள் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. இவற்றில் 10 ஆயிரத்து 140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கெனவே அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், 8 தொகுதி களிலும் வாக்குப்பதிவுக்குத் தேவையான கூடுதலாக 1173 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 142 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமுள்ள 2741 வாக்குப்பதிவு மையங்களுக்கு 11 ஆயிரத்து 455 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago