10 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் - ரூ. 500 கோடியில் கொள்ளிடத்தில் தடுப்பணை : காட்டுமன்னார்கோவிலில் முருகுமாறன் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவில் தொகுதி யில் போட்டியிடும் அதிமுக வேட் பாளர் முருகுமாறன் குமராட்சி, மெய்யாத்தூர் உள்ளிட்ட இடங் களில் நேற்று வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களிடையே பேசிய அவர், “இத்தொகுதியில் இரு முறை வெற்றி பெற வாய்ப்பு அளித்தீர்கள், மூன்றாவது முறை யாக போட்டியிடுகிறேன், அரசு கலைக்கல்லூரி, கூடுவெளியில் பாலிடெக்னிக். ஐடிஐ போன்றவை 10 ஆண்டுகால ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் காட்டுமன் னார்கோவில் தொகு தியில் இக்கல்லூரிகள் உள்ளன.

ரூ. 500 கோடி செலவில் 50 கதவணை கொண்ட தடுப்பணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு, அதன் பணிகள் முடிவடைய உள்ளது.

பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நான் வெற்றி பெற்று நன்றி சொல்ல வரும் பொழுது குடிநீர் தொட்டி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வேன்.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளாக மின்வெட்டு, நில அபகரிப்பு ஆகியவை இல்லை இதற்கு காரணம் பத்தாண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.

குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், குமராட்சி மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்