விருதுநகரில் உ.பி. முதல்வர் பிரச்சாரம் : பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்

By செய்திப்பிரிவு

விருதுநகரில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம நிவாசன் அளித்த பேட்டி: விருதுநகரில் இம்மாதம் 27-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், 31-ம் தேதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஏப்ரல் 2-ல் பிரதமர் மோடி மதுரை வருகிறார். அங்கு நடக்கும் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். விருதுநகர் தொகுதியில் பல்வேறு சமுதாயத் தலைவர்கள் எங்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக அல்லது மோடி போபியா உள்ளது.

குடியுரிமைச் சட்டத்தால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவர் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பொய் கூறுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியினர், திமுகவினர் இதுகுறித்து விவாதிக்கத் தயாரா? குடியுரிமைச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்