ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், வெள்ளோடு, மேட்டுப்பாளையம், தலையக்காட்டூர், சி.எஸ்.ஐ. காலனி, கடலைக்காட்டுப்புதூர், லட்சுமிபுரம் காலனி, கள்ளுக்கடை மேடு, ராசாம்பாளையம் போன்ற பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நேற்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி, அதனைச் சார்ந்த பல்வேறு தொழில்களை நம்பி, பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நூல் விலை உயர்வு, சாய, சலவைத் தொழில்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
விசைத்தறியில் கூலி உயர்வு பிரச்சினை, துணிகள் தேக்கம், வரி, கடன் பெறுதலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நான் வெற்றி பெற்றால் அவற்றைச் செயல்படுத்துவேன். மேலும், இப்பகுதியில் சாலை மேம்பாடு, போதிய அளவு குடிநீர் கிடைக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சிறுவன் காட்டுவலசு, தொட்டிபாளையம், ஏ.டி.காலனி, காரைவாய்க்கால், தேவனம்பாளையம் போன்ற பகுதிகளில் வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணைந்த தொண்டர்களுக்கு அவர் கட்சி அடையாள அட்டையை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago