நாகை, மயிலாடுதுறை மாவட்டங் களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் தொடர் பான புகார்களை மக்கள் தெரிவிப் பதற்காக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள், முகவர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள், செலவினங்களை கண்காணித்தல், வாக்குப்பதிவு தொடர்பான கூட்டம், நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள் ஏ.பி.பட்டேல், திலிப் பந்தர்பட், தேர்தல் பார்வை யாளர்(காவல் துறை) லுபெங் கைலன், தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராஜா சென் குப்தா, யோகேஷ் குமார் சர்மா, நாகை எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் பிரவீன் பி.நாயர் பேசியது:
தேர்தல் தொடர்பான புகார் களை பொதுமக்களும், அரசி யல் கட்சியினரும் நாகை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 1077, 18004257034, 04365 252593, 04365 252594 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், நாகப்பட் டினம், மயிலாடுதுறை மாவட்டங் களுக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்தக் கட்டுப்பாட்டு அறைகளை சீர்காழி தொகுதியில் 04364 270527, மயிலாடுதுறை தொகுதியில் 04364 222033, பூம்புகார் தொகுதியில் 04364 289439, நாகப்பட்டினம் தொகுதியில் 04365 248833, கீழ்வேளூர் தொகுதியில் 04366 275493 வேதாரண்யம் தொகுதியில் 04369 290456 ஆகிய தொலைபேசி எண்களில் மக்கள் தொடர்புகொண்டு, புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.
இதேபோல, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேட்பாளர்களின் கணக்குகளை பராமரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி பொது பார்வையாளர் ராம் லஹான் பிரஷாத் குப்தா, செலவின பார்வையாளர் மயங்க்குமார் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், பொது பார்வை யாளர் பேசியபோது, “வேட்பா ளர்கள் தங்களின் செலவினங் களை முறையாக பராமரிக்கும் வகையில், தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி, அந்த வங்கிக் கணக்கிலிருந்து அனைத்து செலவி னங்களுக்கும் பணப் பரிமாற்றங் களை செய்ய வேண்டும். மேலும், செலவினங்களுக்கு முறையான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago