ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதிநடைபெற உள்ளது. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படவுள்ளது. அங்குள்ள முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் நான்குதொகுதிகளுக்கு தனித்தனியாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகிலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை அமைக்கப்படுகிறது. இதற்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிவரும் வாகனங்கள் வந்து செல்ல தனித்தனி பாதை வசதி ஏற்படுத்தவுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவ குமார், சார் ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago