திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் தொடர்பான மாவட்ட தொடர்பு அலுவலகத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத், சந்தர் பிரகாஷ் வர்மா, உமாநாதா டோலே, மசிர் அலாம், கபில் மீனா மற்றும் காவல் பார்வையாளரான நிலாபா கிஷோர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதை்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி, தேர்தல் பணி அலுவலர்களுக்கான கணினி மூலமாக பணி ஒதுக்கீடு, ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு அறைகளையும் ஆய்வு செய்தனர்.
வாக்குப்பதிவுக்கு பின், வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் ‘ஸ்ட்ராங் ரூம்’ கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, வாக்கு எண்ணும் அறையில் காற்றோட்ட வசதி, பூத் முகவர் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில், அறையில் இட வசதி உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பொதுப் பார்வையாளர்கள் அறிவுறுத்தினார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago