திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி, தாராபுரம் உட்பட 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, 13 ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி சரியாக செலுத்தப்படுகிறதா? தட்டுப்பாடின்றி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இருப்பு இருக்கிறதா?, கரோனா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நம்பியாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே. ஆரம்ப சுகாதார நிலையம் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago