திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ.-வுமான கே.என்.விஜயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பொங்குபாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். தற்போதைய எம்.எல்.ஏ. என்பதாலும், தொகுதிக்குள் நன்கு அனுபவம் உள்ளதாலும் தொகுதிக்குள் செய்த திட்டங்களை சுட்டிக்காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் வடக்கு ஊராட்சிகளுக்கு ரூ.71 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட விஷயங்களை முன்வைக்கிறார்.
இதேபோல, திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவி (எ) சுப்பிரமணி, பெருமாநல்லூர் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக 3 மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றும், தொகுதி வாடிக்கிடப்பதாக கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
இதேபோல, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சு.சிவபாலன், நாம் தமிழர் கட்சியின் ஈஸ்வரன் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் செல்வகுமார், இன்று (மார்ச் 23) காலை 7 மணிக்கு கொங்கு நகரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago