ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம், வாக்குசேகரிப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, கரோனா பாதுகாப்பு வழி முறைகளைப் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறியுடன் வீட்டில் இருப்பவர்கள், நோய்தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனேபெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், வாக்குசேகரிப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும்போதும், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளாலும் கரோனா நோய்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago