வெயில், சரிந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் காரணமாக - விலைக்கு தண்ணீரை வாங்கி மாமரங்களை காக்கும் விவசாயிகள் :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் மாமரங்களுக்கு, டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி காப்பாற்றி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடிசெய்யப்படுகிறது. மா விளைச்சல்,விற்பனை, ஏற்றுமதி என ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றங்களால் மா விவசாயிகள் பல்வேறுசிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நிகழாண்டில் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் கருகி, பூச்சி தாக்குதல் அதிகரித்ததால், இதனை மருந்துதெளித்து விவசாயிகள் கட்டுப்படுத்தினர். தற்போது காய்கள் வளரும் பருவத்தில், மாமரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேஆர்பி அணை இடதுபுற கால்வாய் நீட்டிப்பு பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறும்போது,நிகழாண்டில் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்திருந்தாலும் பனி, பூச்சி தாக்குதல் காரணமாக 40 சதவீதம் மட்டுமே மரங்களில் காய்கள் உள்ளன. மாமரங்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்துகளின் விலை உயர்ந்துவிட்டது. இதே போல் தோட்டம் பராமரிப்பு செலவு, ஆட்கள் கூலியும் உயர்ந்துவிட்டது. இந்நிலையில் தற்போது வெயிலின்தாக்கம் அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருவதால், மா மரங்களுக்கு, டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 2 ஆண்டுகளாக மாவிவசாயிகள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருவதால், மாவிவசாயிகளுக்கு மானியத்தில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்