கரோனா விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் : வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா விதிமுறைகளை முழுமை யாக வணிக நிறுவனத்தினர் பின்பற்ற வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேர்தல் நடத்தை விதிமுறை களால் வணிகர்கள் பெரும் அவதிக்கு உட்பட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் மீண்டும் அதிகரித்துவரும் கரோனா பரவுதல் அடுத்த அலையை ஏற்படுத்துமா என்கிற அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனை கட்டுப் படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

எனவே அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு நடைபெறும் சோதனையில் தமிழகஅரசு கடைபிடிக்க சொல்லி யிருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு தென்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். எனவே வணிக நிறுவனத் தினர் மிகுந்த கவனத்தோடு, அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்து வணிகத்தை தொடர வேண்டும்.

முகக்கவசம் அணிய வும், கிருமி நாசினி பயன்படுத்தவும், சமூக இடை வெளியை பின்பற்றவும் வாடிக்கையாளர்களை வலியுறுத்த வேண்டும். மேலும், வணிகர்களும், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்