அணைக்கட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை ஆட்சியர் சண்முக சுந்தரம் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக கடந்தவாரம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்' வைத்துள்ளனர். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் முன்பாக கண்காணிப்பு கேமராவை பொருத்தி துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் கேமரா காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் பழனி, துணை காவல் கண்காணிப் பாளர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago