தேர்தல் பிரச்சாரத்துக்கு : ஆன்லைனில் அனுமதி பெறலாம் : திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டம், தெருமுனை பிரச்சாரம், விளம்பர பலகை வைக்க வேட் பாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான அனுமதியை பெறலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பொது மக்களிடம் இருந்து வாக்குகளை சேகரிக்கவும், பிரச்சாரங்களில் ஈடுபடவும் அரசு அலுவலகங்களில் நேரடியாக சென்று விண்ணப் பங்களை வழங்கி அனுமதி பெற்று வருகின்றனர்.

இதனால் கால தாமதம் ஏற்படுவதால், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான அனுமதியை எளிமை யாக பெற இணையதள கைப்பேசி செயலியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி யுள்ளது.

அதன்படி https:/suvidha.eci.gov.in என்ற இணையதளம் மூலம் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளரின் பிரதிநிதி கள் ஆன்லைன் மூலம் தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டம், பேரணி கள், தற்காலிக அலுவலகம் திறப்பு, ஒலி பெருக்கி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தல், வாகனங்களுக்கான அனுமதி, ராட்சத பலூன் வைத்தல், வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்தல், தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடத்துதல், விளம்பர பலகை வைத்தல், சுவரொட்டிகள் ஆகியவற்றுக்கான அனுமதியை இணையதளம் மூலம் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கால விரயம் தவிர்க்கலாம்

அதேபோல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மனுவின் நிலவரம் குறித்தும் இணையதளம் மூலம் அறிந்துக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, வேட்பாளர்கள் Suvidha என்ற இணையதளம் மூலம் தங்களுக்கான அனுமதியை ஆன்லைனில் பெற்று கால விரயத்தினை தவிர்த்து தேர்தலை அமைதியாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்