தென்னிந்திய அட்டைப்பெட்டி : உற்பத்தியாளர் சங்கக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க (கோவை மண்டல) நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் வாலிபாளையத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அட்டைப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருளான பேப்பரின் விலை, கடந்த சில மாதங்களில் 85 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கண்டிப்பதுடன்,பேப்பர் ஏற்றுமதிக்கு சில வரையறைகளை வகுக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு தங்கு தடையின்றியும், சீரான விலையிலும் பேப்பர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னலாடை உற்பத்தியாளர்கள் 10 நாட்களுக்குள் அட்டைப்பெட்டிக்கான பில் தொகையை கொடுக்க வேண்டும். ஒரு டன் பேப்பரின் விலை ரூ.20,000-ல் இருந்து, தற்போது ரூ.38000-ம் ஆக உயர்ந்துள்ளது. இதனால், அட்டைப்பெட்டிகளின் விலையும் உயர்த்தப்படும். இதற்கு தொழில்துறையினர் ஆதரவு தர வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தற்போதைய நிலையை தெரிவிக்கும் வகையிலும் வரும் 26, 27-ம் தேதிகளில் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்