ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவத்தின ருக்கு மாவட்ட காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில், துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தேர்தல் பணியில் காவல்துறையினருடன் இணைந்து ஊர்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பாக ஈரோடு எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்கள் அனைத்திலும், முன்னாள் ராணுவத்தி னரின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்துள்ளது. எனவே, இந்த தேர்த லிலும் முன்னாள் ராணுவத்தினர் தேர்தல் பணியாற்றிட முன்வர வேண்டும். தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதுடன், தேர்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே விருப்ப முள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு (0424 – 2266010) தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago