செங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அ. ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு செங்கை மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும், தேர்தல் ஆணையத்தால் 4 தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு வந்துள்ள பார்வையாளர்கள், முகாம் அலுவலகங்களில் தங்கி, தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது முகாம் அலுவலகங்களில் தினமும் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பார்கள்.
சோழிங்கநல்லூர், பல்லாவரம் தொகுதிகளின் பார்வையாளர் குலாம் ஹசன் ஒபைதூர் ரஹ்மான் (செல்போன்- 9345742169) சிட்லபாக்கம் ஊரக வளர்ச்சி விருந்தினர் மாளிகையில், சந்திக்கும் நேரம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை.
செய்யூர் (தனி) மற்றும் திருப்போரூர் தொகுதிகளின் பார்வையாளர் பிஜால் எ ஷா (செல்போன்- 6381830694) மாமல்லபுரம் ஆய்வு மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை.
மதுராந்தகம் (தனி) தொகுதி பார்வையாளர் உத்பால் பிஸ்வாஸ் (செல்போன்-63844 83910) மறைமலை நகர் ஊரக வளர்ச்சி துறை விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 12 மணி முதல் 2 மணி வரை.
தாம்பரம், செங்கல்பட்டு தொகுதி பார்வையாளர் ஆசிப் யூசுப் (செல்போன்- 8838455129), மறைமலை நகர் ஊரக வளர்ச்சி துறை விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 10 மணி முதல் 12 மணி வரை.
அதேபோல் அனைத்து தொகுதிகளுக்கும் காவல் பார்வையாளர் வீரேந்திரா மிஸ்ரா (செல்போன்- 9360010449), மறைமலை நகர் ஊரக வளர்ச்சி துறை விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 11 மணி முதல் 12 மணி வரை.
பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் அது குறித்து பொது பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago