‘விப்ஸ்’ தேசியத் தலைவராக என்எல்சி மருத்துவர் தேர்வு :

By செய்திப்பிரிவு

‘விப்ஸ்’ என்ற அமைப்பின் தேசிய தலைவராக என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனையில் பணி யாற்றி வரும் பெண் மருத்துவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் செயல்பட்டு வரும்மத்திய பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டது ‘விப்ஸ்’ எனப்படும் பொதுத் துறைகளில் பணி யாற்றும் மகளிர் அமைப்பு.

இந்த அமைப்பிற்கான தேசியபொறுப்பாளர்களாக தேர்வு செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் (மார்ச்20) இணைய வழியில் நடைபெற்றது.

அத்தேர்வில் என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனையில் துணை பொது கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் டாக்டர் சி. தாரிணிமவுலி தேசியத் தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் தாரிணி மவுலி ‘விப்ஸ்’ அமைப்பில் நெய்வேலி மைய தலைவி, தென் மாநி லங்களுக்கான செயலாளர் உள் ளிட்ட பல்வேறு பதவிகளில் செயலாற்றி உள்ளார். மேலும் தென்னக விப்ஸ் செயலாளராக பணியாற்றி இந்திய தூதுகுழுவின் ஓர் அங்கமாக ஈரான் நாட் டில் பங்கேற்றார் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

என்எல்சி இந்தியா நிறுவன வரலாற்றில் முதன் முறையாக தேசிய அளவிளான பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் டாக்டர் தாரிணி மவுலி பெற் றுள்ளார்.

பிரபல இதர பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவி வகித்து வரும் டெல்லி எம்எம்டிசியை சேர்ந்த அஞ்சு குப்தா துணைத் தலைவராகவும், மும்பை இந்திய கப்பல் நிறுவனத்தை சேர்ந்த மல்லிகா. எஸ் ஷெட்டி பொதுசெயலாளராகவும் மற்றும் மும்மை இந்திய எண்ணெய் நிறுவனத்தை சேர்ந்த வர்ஷா.எஸ் ரவுத் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்