கரூரில் திமுக, அதிமுக மோதல்: 19 பேர் காயம் :

கரூர் நகராட்சி மாவடியான் கோயில் தெருவில் நேற்று முன் தினம் இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரத்துக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அப் பகுதியைச் சேர்ந்த திமுகவி னர் இரவு 10 மணிக்கு மேலாகி விட்டதாகக்கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்துள்ளனர். இதனால், திமுக, அதிமுகவி னரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் 16 பேரும், திமுக வினர் 3 பேரும் காயமடைந்தனர்.

இந்நிலையில், அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கரூரில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல, அதிமுகவினர் 9 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவினர் தாக்கியதில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுகவினரை மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி சந்தித்து ஆறுதல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்