தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு பரிசீலனை முடிந்ததைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கெனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 வாரமே உள்ளதால் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதுவரை கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளர்கள், தற்போது வீதி வீதியாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால், வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கு சுட்டெரிக்கும் வெயில் பெரும் சவாலாக உள்ளது. காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வேட்பாளர்கள் சோர்வடையும் நிலை உள்ளது.
இதனால், காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். மதியம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். பின்னர் மாலையில் இருந்து இரவு வரை பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago