சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 226 வேட்பாளர்களின் 281 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, சம்பந்தப்பட்ட தேர்தல்நடத்தும் மையங்களில் நேற்று காலை நடைபெற்றது.
தாராபுரம் தொகுதியில் 8 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு14 மனுக்களும், காங்கயத்தில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 50மனுக்களும், அவிநாசியில்13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 12 வேட்புமனுக்களும், திருப்பூர்வடக்கு தொகுதியில் 19 மனுக்கள்நிராகரிக்கப்பட்டு 19 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
இதேபோல, திருப்பூர் தெற்கில்10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 22 மனுக்களும், பல்லடத்தில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 20 மனுக்களும், உடுமலையில்11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு18 மனுக்களும், மடத்துக்குளத்தில்18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 15 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 281வேட்பு மனுக்களில் 170 மனுக்கள்ஏற்கப்பட்டன. 111 மனுக்கள்நிராகரிக்கப்பட்டன.
உதகை
நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 11 மனுக்கள் ஏற்கப்பட்டு 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. குன்னூர் தொகுதியில் 10 மனுக்கள் ஏற்கப்பட்டு 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கூடலூர்தொகுதியில் 7 மனுக்கள் ஏற்கப்பட்டு 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago