கும்மிடிப்பூண்டியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புக் கழிவுகளுடன் வந்த 7 டன் எடை கொண்ட வெடிகுண்டுகள், ராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அழிக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இரும்பு உருக்கு ஆலை சிலவற்றுக்கு, கடந்த 13ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் ஈரான், ஈராக் போரின்போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பல வெடிப்பொருட்களும் கலந்து வந்திருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி 7 டன் எடை கொண்ட 1,628 வெடிப் பொருட்களை ஒரு தொழிற்சாலையில் பத்திரமாக சேமித்து வைத்தனர்.
ராணுவ டிராக்டர்கள்
இந்நிலையில், இந்த வெடிப் பொருட்களை செயலிழக்கச் செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதன்படி, சேமித்து வைக்கப்பட்டிருந்த 622 வெடிப் பொருட்கள் ராணுவ டிராக்டர்கள் மூலம்எடுத்துச் செல்லப்பட்டு, மாதர்பாக்கம் காப்புக்காட்டுப் பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்தனர். இப்பணி 2 நாட்கள் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வை ஒட்டி, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago