‘‘தற்போது நடப்பது அதிமுக, திமுகவுக்கு இடையேயான போட்டி அல்ல, பாஜக, காங்கிரஸுக்குமான போட்டி’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அதிமுகவை நீக்குவது மட்டும் நமது நோக்கமல்ல. மறைமுகமாக இருக்கும் மோசமான சக்தியை விரட்டுவதுதான் நமது நோக்கம். தற்போது நடைபெறும் தேர்தல் என்பது அதிமுகவுக்கும், திமுகவுக்குமான போட்டி அல்ல. பாஜகவுக்கும், காங்கிரஸுக்குமான போட்டி என்றே கருத வேண்டும்.
காங்கிரஸுக்கு சவால் விடக் கூடிய கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. அவர்கள் மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளை தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். அதேபோன்று காங்கிரஸ் கட்சியை அவர்களால் வளைக்க முடியாது. அதனால்தான் காங்கிரஸை ஒழிக்க நினைக்கின்றனர். காங்கிரஸ் ஒழிந்தால் நாமே தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருக்கலாம் என அவர்கள் நினைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago