தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்மாவட்ட செயற்குழுக் கூட்டம்திருச்செங்கோட்டில் நடை பெற்றது. சங்க மாவட்டத் தலைவர்ரா.நடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வே.அண்ணாதுரை பேசினார்.
கூட்டத்தில், அமைச்சுப் பணியாளர்களுக்கு எந்தவித தேர்வும்இன்றி நேரடியாக முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியது போல, தொடக்கக்கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பதவி உயர்வும் இல்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர் களுக்கும் நேரடியாக முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதியில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் சேமிக்கப்படும் தொகைக்கான வட்டிக்கு வருமான வரி விதிப்பதை கைவிட வேண்டும். அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும் ஒரு பட்டதாரி ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகளில் மீதமுள்ள இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழையஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை பணி வரன்முறை செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் வசந்தகுமாரி, லதா ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago