ஈரோடு ரயில்நிலையத் தில் நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ்கண்டனம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவலைத்தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், ரயில் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுவந்தது. உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைப்போன்று நடைமேடை (பிளாட்பார்ம்) டிக்கெட் ரூ.10-க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் தற்போது மீண்டும்கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து ரயில் நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், நடைமேடை டிக்கெட் நேற்று முதல் ரூ.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. நடைமேடை டிக்கெட் வழங்குவதற்காக தனியாக கவுன்ட்டர் அமைக்கப்பட்டு அதில் பணியாளர் நியமிக்கப் பட்டுள்ளார்.
கரோனா பரவலைக் காரணம் காட்டி நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு நிர்வாகி கே.என். பாஷா வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘முதியோர், பெண்களை பாதுகாப்பு கருதி ரயில் நிலைய நடைமேடை வரை சென்று வழியனுப்ப வருபவர்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
கட்டண உயர்வால் கரோனா பரவல் தவிர்க்கப்படும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, நடைமேடைக் கட்டணத்தை ரூ.10 ஆக குறைக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago