பெரம்பலூரில் 3 வீடுகளின் - பூட்டை உடைத்து 41 பவுன் நகைகள் திருட்டு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்- எளம்பலூர் சாலை யில் உள்ள சாமியப்பா நகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கரீம்கான் மனைவி ஹீராபானு (34). தனது குழந்தைகளுடன் தைக்கால் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த ஹீராபானு நேற்று மதியம் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 15 பவுன் நகைகள் மற்றும் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் சாம்சன் கிறிஸ்டோபரும், அவரது மனைவி லில்லியும் ஊட்டியில் உள்ள தனது மகள் சோபியா வீட்டுக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு வந்தனர். வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 6 பவுன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை திரு டிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து, பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, வேப்பந்தட்டை வட்டம் பாண்டகப்பாடி சாலை யைச் சேர்ந்த மாணிக்கம் மகன் காசியும்(43), அவரது மனைவி அம்சவள்ளியும் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கை.களத்தூர் போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள நாகனூர் காலனியைச் சேர்ந்தவர் கலையரசி(53). இவர் கடந்த 18-ம் தேதி மதியம் வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு என 4 பவுன் தங்க நகைகள், ரூ.8,000 ரொக்கம், செல்போன் ஆகியவை திருடு போயிருந்தன. இதுகுறித்து தோகைமலை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்