ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் - தேர்தல் பணியில் ஈடுபடும் 6,944 அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 6,944 அலுவலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி முகாம் 5 மையங்களில் இன்று நடைபெறவுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. 4 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணிக்காக 6,944 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான பணி ஆணை ஏற்கெனவே வழங்கியுள்ள நிலையில், இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு இன்று (21-ம் தேதி) காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. அரக்கோணம்  கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகம், ஓச்சேரி  சப்தகிரி பொறியியல் கல்லூரி, ராணிப்பேட்டை எல்.எப்.சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வி.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆற்காடு  ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி வகுப்பு கள் நடைபெற உள்ளன.

இந்த பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையத்தால் குற்றக்குறிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும்.

பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்கள் மீதான குற்றக் குறிப்புகள் தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகே விலக்கிக் கொள்ளப்படும். அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் அவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்