திருப்பூர் மாவட்டத்தில் 226 பேர் வேட்புமனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 226 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 12-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று ஒரே நாளில் தாராபுரம் 10, காங்கயம் 7, அவிநாசி 10, திருப்பூர் வடக்கு 11, திருப்பூர் தெற்கு 8, பல்லடம் 9, உடுமலைபேட்டை 9, மடத்துக்குளம் 18 என மொத்தம் 82 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 226 வேட்பாளர்கள் மொத்தம் 281 வேட்பு மனு க்களைதாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி தாராபுரம் 18, காங்கயம் 54, அவிநாசி20, திருப்பூர் வடக்கு 31, திருப்பூர் தெற்கு 24, பல்லடம் 30, உடுமலைப்பேட்டை 21, மடத்துக்குளம் 28 என மொத்தம் 226 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக, காங்கயம் தொகுதியில் 54 பேரும், குறைந்தபட்சமாக தாராபுரம் தொகுதியில் 18 பேரும் மனு தாக்கல்செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

அவிநாசி (தனி) தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவை கட்சி வேட்பாளர் இரா.அதியமான், கூட்டணி கட்சியினருடன் பேரணியாக நேற்று அவிநாசி பேரூராட்சி அலுவலகம் வந்தார். வட்டாட்சியர்அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சு.வாசுகியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திமுக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலர் இரா.ஜெய ராமகிருஷ்ணன், மடத்துக்குளம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்