ஈரோட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், ஜவுளி நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்து வருகிறார். சில கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் என 2,152 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம், பெருந்துறையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மூன்று கடைகளுக்கு சீல் வைத்தனர்.
ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் பணி செய்ததாக ஐந்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத நஞ்சை ஊத்துக்குளியில் சூப்பர் மார்க்கெட், காப்பீடு நிறுவனம், தீவன கடை, தேனீர் கடை என நான்கு கடைகளுக்கும், சின்னியம்பாளையம் பகுதியில் பேக்கரி, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட மூன்று கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago