நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 103 பேர் வேட்பு மனு தாக்கல் : 6 தொகுதியில் போட்டியிட 214 வேட்பாளர்கள் மனு

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், 6 சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட 214 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 103 பேர் மனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நாமக்கல், திருச்செங்கோட்டில் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்தி வேலூரில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதன்படி ராசிபுரம் தொகுதியில் நேற்று வரை 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சேந்தமங்கலம் தொகுதியில் 25, நாமக்கல் தொகுதியில் 44, பரமத்தி வேலூரில் 37, திருச்செங்கோடு 40, குமாரபாளையம் தொகுதியில் 45 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 214 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரே நாளில் 103 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து இன்று (20-ம் தேதி) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 22-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்